சினிமா

“மீண்டும் இணையும் ஜனதா கெரேஜ் கூட்டணி” : வெளியானது ஜூனியர் NTR30 அப்டேட்! 

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை பிரஷாந்த் நீல் இயக்குவார், த்ரிவிக்ரம் இயக்குவார் என பல தகவல்கள் வெளி வந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பிரபல தெலுங்கு இயக்குநர்.

“மீண்டும் இணையும் ஜனதா கெரேஜ் கூட்டணி” : வெளியானது ஜூனியர் NTR30 அப்டேட்! 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் நடிப்பில் தற்போது ராஜமௌலி இயக்கத்தில் RRR தயாராகிக் கொண்டிருக்கிறது. இதில் ராம் சரணுடன் இணைந்து நடிக்கிறார்.

உகாதி தின ஸ்பெஷலாக இன்று இந்தப் படத்தின் புதிய போஸ்டர் கூட வெளியிடப்பட்டிருக்கிறது. இதனையடுத்து ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை பிரஷாந்த் நீல் இயக்குவார், த்ரிவிக்ரம் இயக்குவார் என பல தகவல்கள் வந்து கொண்டே இருந்தது.

தற்போது அந்த இயக்குநர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரட்டல சிவா இயக்கத்தில்தான் நடிக்க இருக்கிறார். இது ஜூனியர் என்.டி.ஆரின் 30வது திரைப்படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.

தற்போது கொரட்டல சிவா, சிரஞ்சீவி - ராம் சரண் இணைந்து நடிக்கும் `ஆச்சார்யா' பட வேலைகளில் இருக்கிறார். என்.டி.ஆரும் RRR பட வேலைகளில் இருக்கிறார். மேலும் `மீலோ எவரு கோடீஸ்வருடு' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதனை எல்லாம் முடித்ததும் கொரட்டல சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். ஏற்கெனவே இந்த இருவரும் இணைந்து பணியாற்றிய `ஜனதா கேரேஜ்' மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

தற்போது இரண்டாவது முறையாக இவர்கள் இணைவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories