சினிமா

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா? : படக்குழு விளக்கம்!

’கோப்ரா' படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது என்பது பொய்யான செய்தி என செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் ட்விட்டரில் பக்கத்தில் அறிவித்துள்ளது.

விக்ரம் நடிக்கும் ‘கோப்ரா’ படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறதா? : படக்குழு விளக்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. இவரது மூன்றாவது படம் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் `கோப்ரா'. ஸ்ரீனிதி ஷெட்டி, மியா, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ரோஷன் மேத்திவ், மிர்ணாளினி எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். இதில் விக்ரமுக்கு பல கெட்டப்கள் இருக்கிறது, அதனுடைய போஸ்டர்களும், டீசரும் வெளியாகி படம் படத்தின் மேல் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.

தொடர்ந்து பல பெரிய ஹீரோக்களின் படங்கள் OTT-யில் வெளியாகியிருக்கிறது. கூடவே மீண்டும் தியேட்டர்கள் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால், விக்ரமின் கோப்ரா படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்தது. இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் மூலம் லலித் குமார் தயாரிக்கிறார்.

அவர் `கோப்ரா' படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது என்பது பொய்யான செய்தி என, செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் ட்விட்டரில் பக்கத்தில் அறிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ஹரீஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்தப் படம் பற்றிய ரிலீஸ் செய்திகள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories