சினிமா

ரிஷி கபூரின் வெற்றிடத்தை அமிதாப் நிரப்புவார்: மீண்டும் இணையும் ‘பிக்கு’ கூட்டணி!

ரிஷி கபூரின் மறைவால் கைவிடப்பட்ட நிலையில் இருந்த தி இன்டர்ன் படத்தின் இந்தி ரீமேக் பணிகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது.

ரிஷி கபூரின் வெற்றிடத்தை அமிதாப் நிரப்புவார்: மீண்டும் இணையும் ‘பிக்கு’ கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நான்சி மேயர்ஸ் இயக்கத்தில், ராபர்ட் டி நீரோ - அன்னா ஹாத்வே நடித்து 2015ல் வெளியான ஹாலிவுட் படம் `தி இன்டர்ன்'. இது மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது, ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை அதே பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படும் அறிவிப்பு 2020 ஜனவரி மாதம் வெளியானது. அதன்படி ராபர்ட் டி நீரோ ரோலில் ரிஷி கபூரும், அன்னா ஹாத்வே ரோலில் தீபிகா படுகோனும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது.

உடனடியாக துவங்க இருந்த படம், கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இதில் நடிக்க இருந்த ரிஷி கபூர் 2020 ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். அதன் பின் இந்தப் படம் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

கிட்டத்தட்ட கைவிடப்பட்ட படமாக இருந்த சூழலில் இந்தப் படத்தை மறுபடியும் துவங்க இருக்கிறார்கள். ரிஷி கபூருக்கு பதிலாக அமிதாப் பச்சன் அந்தப் பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே அமிதாப் - தீபிகா இணைந்து, `பிக்கு' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் `தேவர் (கில்லி ரீமேக்)', பதாய் ஹோ ஆகிய படங்களை இயக்கிய அமித் ஷர்மா தான் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். தற்போது அவர் இயக்கத்தில் அஜய் தேவ்கன், ப்ரியாமணி நடிக்கும் `மைதான்' படம் உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதனையடுத்து `தி இன்டர்ன்' பட ரீமேக்கை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தை Athena Entertainment, Warner Bros India உடன் இணைந்து தீபிகா படுகோன் தயாரிக்கிறார். படத்தை 2022ல் வெளியிட இருக்கிறார்கள்.

banner

Related Stories

Related Stories