சினிமா

‘JD’யாகும் ஹிருத்திக் ரோஷன்? - இந்தியில் ரீமேக் ஆகிறது விஜய்யின் மாஸ்டர் - வெளியானது அறிவிப்பு!

ஒரு ஆண்டுக்கு பிறகு வெளியாகியும் விஜய்யின் மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்த நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.

‘JD’யாகும் ஹிருத்திக் ரோஷன்? - இந்தியில் ரீமேக் ஆகிறது விஜய்யின் மாஸ்டர் - வெளியானது அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் - விஜய் சேதுபதி நடித்து பொங்கலுக்கு வெளியான படம் 'மாஸ்டர்'. ரிலீஸூக்கு தயாராகியும் ஒரு வருடத்திற்கு மேலாக காத்திருந்து வெளியிடப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் கொடுத்த பேராதரவால் மிகப்பெரிய ஹிட் படமானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்தும் வெளியிடப்பட்டது. வழக்கமாக விஜய் நடித்த படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு டிவியில் ஒளிபரப்பாகும்.

ஆனால் மாஸ்டர் நேரடியாக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இருப்பினும் இந்தப் படத்துக்கான இந்தி ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவுகிறது. Endemol Shine India, Murad Khetani [Cine1 Studios] and 7 Screen Studio ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கை தயாரிக்க இருக்கிறார்கள்.

இன்னும் சில தினங்களில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனக்கூறப்படுகிறது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதன் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories