சினிமா

KGF வில்லனை மிரளவைக்கும் விஜய் ஆன்டனி : வெளியானது கோடியில் ஒருவன் ட்ரெய்லர்!

விஜய் ஆன்டனி - ஆத்மிகா நடிப்பில் உருவாகியிருக்கும் கோடியில் ஒருவன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

KGF வில்லனை மிரளவைக்கும் விஜய் ஆன்டனி : வெளியானது கோடியில் ஒருவன் ட்ரெய்லர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இசையமைப்பாளராக பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையைமைத்தவர் விஜய் ஆண்டனி. பின்பு 'நான்' படம் மூலம் நடிகராகவும் அறிமுகமாகி சில ஹிட் படங்களைக் கொடுத்தார்.

சமீபமாக அவர் நடித்த 'திமிரு பிடிச்சவன்' 'கொலைகாரன்' போன்ற படங்கள் மிகப் பெரிய ஹிட் படங்களாக அமையவில்லை. அதனால் அடுத்து ஒரு ஹிட் கொடுக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார்.

அதன்படி அவர் நடிப்பில் தமிழரசன், அக்கினி சிறகுகள் ஆகிய படங்கள் ரிலீஸூக்குத் தயாராக இருக்கிறது. இந்த லிஸ்ட்டில் 'கோடியில் ஒருவன்' படமும் இணைந்திருக்கிறது‌.

இந்தப் படத்தை ஆள், மெட்ரோ போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். ஏற்கெனவே கோடியில் ஒருவன் பட டீசர் வெளியாகியிருந்த நிலையில், இன்று படத்தின் டிரெய்லரை வெளியிட்டிருக்கிறார்கள். சமூகம் மற்றும் அரசியல் சார்ந்து படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக, ஆத்மிகா நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனி நடித்து முடித்திருக்கும் படங்களில் இந்தப் படம் தான் முதலில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதனையடுத்து 'பிச்சைக்காரன் 2' படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்திற்கு கதையை அவரே எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories