சினிமா

மில்லியன்களை குவிக்கும் சாரங்க தரியா : டோலிவுட்டில் ஹிட் அடிக்கும் சாய் பல்லவி - கண்டுகொள்ளுமா கோலிவுட்?

நாக சைதன்யா சாய் பல்லவி நடிப்பில் வெளியீட்டுக்கு காத்திருக்கும் லவ் ஸ்டோரி படத்தின் சாரங்க தரியா பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் கலக்கி வருகிறது.

 மில்லியன்களை குவிக்கும் சாரங்க தரியா : டோலிவுட்டில் ஹிட் அடிக்கும் சாய் பல்லவி - கண்டுகொள்ளுமா கோலிவுட்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாளத்தில் உருவான பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாய் பல்லவி. அதன் மூலம் அவருக்கு கிடைத்த வரவேற்பினால் தொடர்ந்து பல மொழிகளிலும் நடிக்க வைக்க தொடங்கினார்கள். தமிழில் தியா, மாரி 2, எல்.ஜி.கே ஆகிய படங்களில் நடித்தார். தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் ஷேகர் கம்முலா இயக்கத்தில் சாய் பல்லவி நடித்த 'ஃபிதா' படம் மிகப்பெரிய ஹிட்டானது. கூடவே படத்தின் பாடல்களும், அதில் சாய் பல்லவியின் நடனமும் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இப்போது ஷேகர் கம்முலா இயக்கத்தில் நாகசைத்தன்யா - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'லவ் ஸ்டோரி' இந்தப் படத்தின் பாடல்களும் வெளியாகி ஹிட்டாகியிருக்கிறது. இதில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல்தான் 'சாரங்க தரியா'. இது இப்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது.

v

யூட்யூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை மிகக் குறைந்த காலத்திலேயே பெற்றுள்ளது. இதற்கு முன்பு தமிழில் மாரி 2 படத்தின் ரௌடி பேபி, தெலுங்கில் அல்லு அர்ஜூனின் 'அலா வைகுண்டபுரம்லோ' படத்தின் புட்டபொம்மா பாடலும் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றுது.

ஆனால் படம் வெளியாகும் முன்பே 100 மில்லியன் என்ற சாதனையை செய்திருக்கிறது 'சாரங்க தரியா'. இந்த லவ் ஸ்டோரி ஏப்ரல் 16ம் தேதி வெளியாக இருக்கிறது. மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடலின் வெற்றி சாதனைக்கு சாய் பல்லவியும் மிக முக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories