சினிமா

தங்கக் கடத்தலின் அடுத்த நிலை என்ன? Money heist 5 ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற money heist சீரிஸின் 5வது சீசன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தங்கக் கடத்தலின் அடுத்த நிலை என்ன? Money heist 5 ரிலீஸ் தேதி அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனா லாக்டவுன் காரணமாக நிகழ்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று ரசிகர்களுக்கு ஓடிடி தளங்களுக்குமான நெருக்கம். முன்பு ஓடிடி தளங்களில் படங்களை மட்டும் பார்த்து வந்தவர்கள், மிக அதிகமாக வெப் சீரிஸ்களை பார்க்க துவங்கியது இந்த லாக்டவுன் காலத்தில்தான். அதற்கு ஏற்றது போல பல வெப் சீரிஸ்களில் புதிய சீசன்கள் வெளியானது.

அப்படி பரபரபப்பாக பேசப்பட்ட சீரிஸ்களில் ஒன்று ஸ்பானிஷில் வெப்சீரிஸான மணி `ஹெய்ஸ்ட்'. முதலில் ஸ்பானிஷ் மொழியிலும், ஆங்கில சப்டைட்டிலும் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்த இந்த தொடருக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக, ஆங்கிலத்திலும் டப் செய்யப்பட்டது.

அதன் பின் இன்னும் புது ஆடியன்ஸ் உள்ளே வந்தார்கள். இதுவரை நான்கு சீசன்களாக வெளிவந்திருக்கும் இந்த சீரிஸின் அடுத்த பாகம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது. நெட்ஃப்ளிக்ஸில் வெளியான இதன் முதல் இரண்டு சீசன்களில், ப்ரஃபசர் தலைமையிலான குழு, புதிதாக பணத்தை அச்சடித்து அதை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதைக் காட்டியது.

அடுத்த இரண்டு சீசன்களில், தங்கத்தை கொள்ளையடிக்க சென்று, கொள்ளை நடந்து கொண்டிருந்த போது நிகழும் ஒரு திருப்பத்துடன் முடிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் தொடர்ச்சியாக ஐந்தாம் பாகம் வெளியாக இருக்கிறது.

அனேகமாக இது மணி ஹெய்ஸ்ட்டின் இறுதி சீசனாக கூட இருக்கலாம். இந்த ஐந்தாவது சீசனில் 15 எப்பிசோடுகள் இருக்கும் எனக் கூறப்படுகிறது. விரைவில் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories