சினிமா

‘ஏலே’ படத்தை தொடர்ந்து நேரடியாக டிவியில் ரிலீசாகிறது யோகி பாபுவின் ‘மண்டேலா’ படம்!

நடிகர் யோகி பாபு ஹீரோவாக நடித்திருக்கும் மண்டேலா திரைப்படத்தில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

‘ஏலே’ படத்தை தொடர்ந்து நேரடியாக டிவியில் ரிலீசாகிறது யோகி பாபுவின் ‘மண்டேலா’ படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வளர்ந்து கொண்டிருப்பவர் யோகிபாபு. தமிழின் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் எனப் பலருடனும் நடித்திருக்கிறார்.

காமெடியனாக கலக்குவதைப் போல சில படங்களில் ஹீரோ கதாபாத்திரத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பன்னிக்குட்டி, மண்டேலா, பொம்மை நாயகி என ஒவ்வொரு படமும் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.

இதில் இவரின் மண்டேலா திரைப்படத்தின் டீசரும் ஒரு பாடலும் ஏற்கெனவே வெளியாகிவிட்டது. இந்தப் படத்தை ரிலையன்ஸ், விஷ்பெரி, ஒய் நாட் ஸ்டுடியோஸுடன் இணைந்து இயக்குங்கர் பாலாஜி மோகன் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ணன் ரவி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

தற்போது இந்தப் படத்தை நேரடியாக தொலைக்காட்சியிலும் பின்பு நெட்ஃப்ளிக்ஸிலும் வெளியிட இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

இதற்கு முன்பு ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவான, `ஏலேய்' படமும் இது போன்று முதலில் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகி சில தினங்கள் கழித்து நெட்ஃப்ளிக்லில் வெளியானது.

அதே போன்று `மண்டேலா' படமும் வெளியாக இருக்கிறது என சொல்லப்படுகிறது. மேலும் இன்று மண்டேலா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் யோகி பாபு நடிப்பில் உருவாகியிருக்கும் மண்டேலா படத்தின் டிரெய்லரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த படம் ஏப்ரல் 4ம் தேதி விஜய் டிவியில் நேரடியாக வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories