சினிமா

தொடங்கியது S40 : கோவிட் பாதிப்புக்கு பிறகு ஷூட்டிங் வந்த சூர்யா - வைரலாகும் புகைப்படம்!

கொரோனா பாதிப்புக்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்திலான படத்தின் ஷூட்டிங் பணிகளை தொடங்கினார் நடிகர் சூர்யா.

தொடங்கியது S40 : கோவிட் பாதிப்புக்கு பிறகு ஷூட்டிங் வந்த சூர்யா - வைரலாகும் புகைப்படம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. இதற்கு எதிராக திரையரங்க உரிமையாளர்களிடமிருந்து சில சலசலப்பும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சூரரைப்போற்று படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படம் சூர்யாவின் 40வது படம்.

இந்தப் படத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி பிப்ரவரி மாதம் படத்திற்கான பூஜையும் நடத்தப்பட்டது. அந்த மாதமே படப்பிடிப்பைத் துவங்க இருந்தது படக்குழு. ஆனால் சூர்யாவுக்கு கோவிட் பாதிப்பு ஏற்பட்டதால் படப்பிடிப்பு துவங்காமல் இருந்தது.

இப்போது கொரோனாவிலிருந்து குணமாகிவிட்டு படத்தில் பணியாற்ற தயாராகிவிட்டார் சூர்யா. அதன்படி, நேற்றிலிருந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக துவங்கியிருக்கிறது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு ட்வீட்டை பதிவு செய்து "படப்பிடிப்பு தளத்துக்கு மீண்டும் வருவதை மகிழ்ச்சியாக உணர்கிறேன்" தெரிவித்திருக்கிறார் சூர்யா.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிப்பதாகக் கூறப்படுகிறது. சத்யராஜ் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். வில்லனாக வினய் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் மூலம் சூர்யா படத்திற்கு முதன் முறையாக இசையமைக்கிறார் டி.இமான்.

இதன் பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் `வாடிவாசல்', இயக்குநர் சிறுத்தை சிவா `அண்ணாத்த' படத்துக்குப் பிறகு இயக்கும் படம் என சூர்யாவின் அடுத்த படங்களின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories