சினிமா

பெரியாருக்கு அவமரியாதை : வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - மன்னிப்புக் கோரிய இயக்குநர் செல்வராகவன் ! (Video)

தந்தை பெரியாரை அவமதிக்கும் விதமாகப் பேசிய இயக்குநர் செல்வராகவன், கடுமையான எதிர்ப்பை அடுத்து மன்னிப்புக் கோரினார்.

பெரியாருக்கு அவமரியாதை : வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - மன்னிப்புக் கோரிய இயக்குநர் செல்வராகவன் ! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருந்த ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படம் பல்வேறு பிரச்னைகளுக்கு பிறகு கடந்த வாரம்தான் திரைக்கு வந்தது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், படத்தில் சைகோ கொலைகாரனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு வைத்திருந்த பெயரும், இயக்குநர் செல்வராகவன் அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதில், எஸ்.ஜே,சூர்யாவுக்கு படத்தில் ராமசாமி என பெயர் வைத்திருந்தது தனி நபரை குறிக்கத்தானே என தொகுப்பாளர் கேள்வி எழுப்ப அதற்கு செல்வராகவனும் yes எனக் கூறியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி அவரது ரசிகர்கள் மத்தியிலேயே பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

பொதுவாக செல்வராகவன் படமென்றால் அதில் முற்போக்குக் கருத்து இருக்கும் என்ற நம்பிக்கை இருந்து வந்த நிலையில் அவற்றை அந்த வீடியோ உடைத்திருப்பது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. மேலும் செல்வாவின் இந்த பதிலுக்கு பெரியார் ஆதரவாளர்கள், சமூக ஆர்வலர்கள், ரசிகர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் அந்த விவகாரம் தொடர்பான மன்னிப்புக் கேட்ட செல்வராகவன் நெறியாளரின் கேள்வி புரியாமல் ஆம் சென்று சொல்லிவிட்டேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories