சினிமா

“சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை” : 20 விருதுகளை வென்ற ‘வாய்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

சர்வதேச திரைப்பட விழாவில் 20 விருதுகளை வென்ற ‘வாய்தா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

“சாமானியர்கள் மேல் நடத்தப்படும் வன்முறை” : 20 விருதுகளை வென்ற ‘வாய்தா’  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தயாரிப்பாளர்கள் தொடங்கி இசையமைப்பாளர்கள் என பல புதுமுகங்களைக் கொண்டு தயாரிக்கப்படும், ‘வாய்தா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குநரான மகிவர்மன் சி.எஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி.மகேந்திரனின் மகன், புகழ் மகேந்திரன் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

‘ஜோக்கர்’, ‘கே.டி. என்கிற கருப்பத்துரை’ படம் மூலம் பிரபலமான நடிகர் மு.ராமசாமி, நாசர் மற்றும் அறிமுக நாயகி ஜெசிகா பவுலின், ‘நக்கலைட்ஸ்’ புகழ் பிரசன்னா உள்ளிட்ட முக்கிய திரைக்கலைஞர்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

வராஹா சுவாமி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் கே.வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சி.லோகேஷ்வரன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டரை இன்று நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்தபடக்குழுவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் ‘வாய்தா’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமல்லாது, பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்ற ‘வாய்தா’ திரைப்படம் இதுவரை 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories