சினிமா

“எஸ்.பி.பி நம் கலாசாரத்தின் ஒரு பகுதி.. அவரை நாம் கொண்டாட வேண்டும்” - ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்! (Video)

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மறைவையொட்டி இரங்கல் தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான் அவரை கொண்டாடியாக வேண்டும் எனக் கூறி வீடியோ வெளியிட்டுள்ளார்.

“எஸ்.பி.பி நம் கலாசாரத்தின் ஒரு பகுதி.. அவரை நாம் கொண்டாட வேண்டும்” - ஏ.ஆர்.ரஹ்மான் உருக்கம்! (Video)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்ட பன்முக கலைஞனான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார் என்ற செய்தி உலகெங்கும் உள்ள இசை ரசிகர்களுக்கு பேரிடியாக உள்ளது.

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் கோடானக் கோடி ரசிகர்கள் எஸ்.பி.பியை நினைவுப்படுத்தும் வகையில் பதிவுகளை வெளியிட்டு தங்களது சோகங்களை பகிர்ந்து வருகின்றனர். மிகப்பெரிய சகாப்தமாக விளங்கிய எஸ்.பி.பியின் இழப்பு திரைத்துறையின் மாபெரும் இழப்பாக கருதப்படுகிறது.

இளையராஜா, பாரதிராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ் என பல்வேறு இசை மற்றும் கலையுலக ஜாம்பவான்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் இசை வாழ்வை கொண்டாடுவோம் எனக் குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றினை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் பணியாற்றிய நிகழ்வுகள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் நினைவுக் கூர்ந்துள்ளார். மேலும், “தென்னிந்தியாவில் எஸ்.பி.பியும் அவரது குரலும் நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாகும். அவர், நமது வெற்றி, அன்பு, மகிழ்ச்சி, பக்தி என அனைத்திலும் ஒரு பகுதியாவார். அவரது இழப்பு.. இதனை இழப்பு எனக் கூறமாட்டேன்.

அவரது வாழ்க்கையை நாம் கொண்டாட வேண்டும் என்றே நினைக்கிறேன். ஏனெனில் அவரது தனது இசையின் மூலம் பல்வேறு பரிசுகளை நமக்கு அளித்திருக்கிறார். ஆகவே நாம் மட்டுமே அவரை கொண்டாட முடியும். அவரை மேன்மேலும் கொண்டாடியாக வேண்டும்” என உருக்கமாக பேசியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

banner

Related Stories

Related Stories