சினிமா

பிசாசுக்காக பாலாவின் நெற்றியில் முத்தம் பதித்த மிஷ்கின்!

இய்கக்குநர் மிஷ்கின் 'பிசாசு 2' படத்தை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

பிசாசுக்காக பாலாவின் நெற்றியில் முத்தம் பதித்த மிஷ்கின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மிஷ்கின் மற்றொரு இயக்குநரான பாலாவுக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் போக்கை புது மாதிரியாக மாற்றிய பெருமைமிக்க இயக்குநர்களுள் மிஷ்கினும் ஒருவர். அதேபோல் தன்னுடைய திரைமொழியால் தமிழ்ச் சமூகத்தை ஆட்டுவித்தவர் இயக்குநர் பாலா. இவர்கள் இருவரின் பங்களிப்பில் உருவான படமே ‘பிசாசு’.

இயக்குநர் பாலா தயாரிப்பில், மிஷ்கின் இயக்கிய அந்தப் படம் பெரிய ஹிட் ஆனது. தமிழில் வெளியான திகில் படங்களில் மிஷ்கினின் பிசாசு புதுவிதமாகவும் அதே நேரத்தில் ரசிகர்களைக் கவரவும் செய்தது.

இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா நடிக்க, கார்த்திக் ராஜா இசையமைப்பில் ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் மிஷ்கின் இயக்க உள்ளதாக தன் பிறந்தநாளன்று ட்விட்டரில் அறிவித்தார்.

பிசாசு என்ற அந்தத் தலைப்பு இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோவுக்கு சொந்தமானதால் அந்த தலைப்பை அதிகாரப்பூர்வமாகப் பாலா வழங்கினால் மட்டுமே இந்த படத்துக்குப் பிசாசு 2 என்ற தலைப்பை வைக்க முடியும். அதற்கு இயக்குநர் பாலா சம்மதம் தெரிவித்துள்ளதால், அவருக்கு மிஷ்கின் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் “நான் ஒரு மனிதருக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அது நான் மிகவும் நேசிக்கின்ற மகா கலைஞனான என் பாலா. 'பிசாசு 2' இயக்கப்போகிறேன் என்று சொன்னவுடன் உடனடியாக அவருக்குச் சொந்தமான டைட்டிலை எனக்கு வழங்கிய பாலாவின் நெற்றியில் என் அன்பான முத்தங்களைப் பதிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மிஷ்கினின் ‘பிசாசு 2’ படம் அடுத்த வருடம் பிப்ரவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories