சினிமா

100 கிலோவிலிருந்து 75 கிலோவாக உடல் எடையைக் குறைத்த சிம்பு : ‘மாநாடு’ படத்துக்கு ரெடி!

வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ திரைப்படத்துக்காக சிம்பு கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

100 கிலோவிலிருந்து 75 கிலோவாக உடல் எடையைக் குறைத்த சிம்பு : ‘மாநாடு’ படத்துக்கு ரெடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் சிம்பு 20 கிலோவுக்கும் மேலாக உடல் எடையைக் குறைத்து ‘மாநாடு’ படத்துக்காக தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிம்பு லண்டனில் கடுமையான உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. அங்கே அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆனது. பல புகைப்படங்களும் வெளியாகின.

சிம்புவின் ரசிகர்கள் எடை குறைந்த சிலிம்மான சிம்புவை பார்த்து மகிழ்ந்தனர். இந்நிலையில் ஊரடங்கு காலம் முழுக்க வீட்டுக்குள்ளேயே நேரத்தைக் கழித்த சிம்பு, 100 கிலோ உடல் எடையிலிருந்து 75 கிலோ உடல் எடைக்கு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அவர் நடிக்கும் ‘மாநாடு’ திரைப்படத்துக்காக அவர் உடல் எடையைக் குறைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் பரவி, ஊரடங்கு ஏற்படுத்தப்பட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது.

அந்தப் படத்தின் வேலைகள் தொடர்ந்து நடைபெறுமா என ரசிகர்கள் சந்தேகத்தில் இருந்ததை அடுத்து பட வேலைகள் விரைவில் தொடரும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்லாமல் கன்னட படமான மஃப்டி ரீமேக்கில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கன்னடத்தில் இயக்கிய இயக்குநர் நாரதனே தமிழிலும் இயக்குகிறார். இப்படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.

banner

Related Stories

Related Stories