சினிமா

தன்னுடைய ஜிம் டிரெய்னருக்கு 70 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்த நடிகர் பிரபாஸ்!

பிரபாஸின் நல்ல மனதுக்காகவே அவருக்கு ரசிகர்கள் உள்ளதும் உலகறிந்த ஒன்றே.

தன்னுடைய ஜிம் டிரெய்னருக்கு 70 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்த நடிகர் பிரபாஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

பாகுபலி நடிகர் பிரபாஸ் தன்னுடைய ஜிம் பயிற்சியாளருக்கு 73 லட்சம் ரூபாய் மதிப்புள்ள விலையுயர்ந்த எஸ்யூவி கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

பாகுபலி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ். பிரபாஸ் ஒரு நடிகராக கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்றிருந்தாலும், அவருடைய நல்ல குணத்துக்காகவும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

சமீபத்தில் தன்னுடைய உடற்பயிற்சி பயிற்சியாளரான லட்சுமணன் ரெட்டி என்பவருக்கு பிரபாஸ் ரேஞ் ரோவர் வெல்லார் எஸ்யூவி காரை பரிசளித்துள்ளார். இந்த காரில் விலை 73.30 லட்ச ரூபாயாகும். பிராபாஸின் உடற்பயிற்சியாளார் லட்சுமணன் முன்னாள் ஆணழகன். அவர் 2010-ம் ஆண்டு மிஸ்டர் வோர்ல்ட் பட்டத்தையும் வென்றவர்.

இந்த ரேஞ் ரோவர் வெல்லார் எஸ்யூவி கார் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது. இந்த கார் சென்ற வருடம்தான் அந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. பெட்ரோல் 2.0 இஞ்சின் கொண்ட இந்த காரில் 8 கியர்கள் உள்ளன. மேலும் இக்கார் 4 வீல் டிரைவ் வசதி கொண்டது. இந்த காரின் பெட்ரோல் மாடல் 7.1 விநாடிகளில் மணிக்கு 100 கிமி வேகத்தை அடையும் வல்லமைக் கொண்டது.

மேலும் இது மண், சகதி நிறைந்த சாலை மற்றும் ஈரமான தரை உள்ளிட்ட அனைத்திலும் லாவகமாக பயனிக்ககூடிய வகையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories