சினிமா

“நேசத்தால் சூழ்ந்துகொள்ளுங்கள்; அதுதான் உண்மையான பலம்” : கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா கடிதம்!

துரிதமாகச் சோதனை செய்துகொண்டு, ஆரோக்கியமான உணவை உண்டு, திடமாக இருங்கள். அதுதான் இந்த ராட்சசனை எதிர்கொள்ள ஒரே வழி என கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா தெரிவித்துள்ளார்.

“நேசத்தால் சூழ்ந்துகொள்ளுங்கள்; அதுதான் உண்மையான பலம்” : கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா கடிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகை ஜெனிலியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தற்போது 21 நாட்கள் தனிமைக்குப் பின் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெனிலியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்பதிவில்,” மூன்று வாரங்களுக்கு முன்பாக எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. நான் கடந்த 21 நாட்களாக எந்த வித அறிகுறியும் இல்லாமல் இருந்தேன். கடவுளின் அருளால் எனக்கு இன்று கோவிட் நெகட்டிவ் ஆகியுள்ளது.

நான் என் பிரார்த்தனைகளை எண்ணிக்கொள்ளும் இந்நேரத்தில் கொரோனாவுடனான என்னுடைய போராட்டம் என்பது சுலபமாகவே இருந்தது. ஆனால் கடந்த 21 நாட்கள் தனிமை என்பது மிகவும் சவாலானதாக இருந்தது. எவ்வளவுதான் ஃபேஸ்டைம் வீடியோ காலில் பேசினாலும், டிஜிட்டலில் மூழ்கி இருந்தாலும் அந்த தனிமையைக் கொல்ல முடியவில்லை.

என்னுடைய குடும்பத்தினருடனும் நான் நேசிப்பவர்களுடனும் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சியடைகிறேன். உங்களை நேசத்தால் சூழ்ந்துகொள்ளுங்கள். அதுதான் உண்மையான பலம் அதுதான் ஒருவருக்குத் தேவை.

துரிதமாகச் சோதனை செய்துகொண்டு, ஆரோக்கியமான உணவை உண்டு, திடமாக இருங்கள். அதுதான் இந்த ராட்சசனை எதிர்கொள்ள ஒரே வழி என ஜெனிலியா பதிவிட்டுள்ளார்.

ஜெனிலியாவுக்கு முன்பாக அமிதாப் பச்சன் மற்றும் அவரது அபிஷேக் பச்சன், அவரது மனைவி ஐஸ்வர்யா ராய் அவரது மகள் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

banner

Related Stories

Related Stories