சினிமா

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று உறுதி - நலமாக உள்ளதாக ரசிகர்களுக்கு கடிதம்!

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியிருப்பதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதம் மூலம் பகிர்ந்துள்ளார்.

  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதை அவரே தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழில் ‘மொட்ட சிவா கெட்ட சிவா’, ‘டார்லிங்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிக்கி கல்ராணி. இவருக்குக் கடந்த வாரம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அவர் வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டிருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கடிதம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

”எனக்குக் கடந்த வாரம் நடந்த சோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் மீண்டு வந்துகொண்டிருக்கிறேன். இப்போது நலமாக உணர்கிறேன். என்னைப் பார்த்துக்கொண்ட என்னுடைய நெருக்கமானவர்களுக்கும், அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும், முக்கியமாக எனக்குத் தொடர்ந்து ஒத்துழைப்பு தரும் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் நன்றி.” எனப் பதிவிட்டு அந்த கடிதத்தைப் பகிர்ந்துள்ளார்.

நிக்கி கல்ராணி தன்னுடைய கடிதத்தில் எனக்கு கோவிட் - 19 நோய்த்தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. கொரோனா வைரஸை பற்றி பல்வேறு பயமும், நிச்சயமற்ற தன்மையும் வெளியில் உள்ளது. அதனால் என்னுடைய அனுபவங்களை எழுதுகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ள நிக்கி கல்ராணி எல்லோரையும் சமூகத்துக்கு ஆற்றவேண்டிய கடமையை ஆற்றி வீட்டிலிருந்து குடும்பத்துடன் நேரம் செலவிட்டு உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் காக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories