இந்தியா

"நீங்கள் எப்போதுமே வீரன்” - சஞ்சய் தத்துக்கு நம்பிக்கை அளித்த யுவராஜ் சிங்!

மருத்துவ காரணங்களால் சிறிது காலம் பாலிவுட்டிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார் சஞ்சய் தத்.

"நீங்கள் எப்போதுமே வீரன்” - சஞ்சய் தத்துக்கு நம்பிக்கை அளித்த யுவராஜ் சிங்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உடல்நலக்குறைவால் தற்காலிக ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் ஆறுதல் கூறியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நெஞ்சில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன் பின் அவர் அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆகி, தான் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.

இது குறித்துப் பதிவிட்டிருந்த சஞ்சய் தத் “நண்பர்களே, நான் சில மருத்துவக் காரணங்களால் என்னுடைய பணியிலிருந்து சிறிய ஓய்வு எடுத்துக்கொள்கிறேன். என்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்னுடன் உள்ளனர். வருத்தப்படவோ, ஏதும் தவறாக யூகிக்கவோ வேண்டாம் என நான் என்னுடைய நலம் விரும்பிகளை கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்திருந்தார்.

61 வயதாகும் சஞ்சய் தத் தனக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அறிவித்துள்ளார். இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரும் சஞ்சய் தத்தின் நண்பருமான யுவராஜ் சிங் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சஞ்சய் தத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

“நீங்கள் இப்போது மட்டுமல்லாமல் எப்போதுமே ஒரு வீரன். இது என்ன மாதிரியான வலியை உண்டுபண்ணும் என்று எனக்குத் தெரியும். அதே நேரத்தில் நீங்கள் திடமானவர். இந்த காலத்தைக் கடந்து செல்வீர்கள் என்பதும் தெரியும். நீங்கள் விரைவில் குணமடைவதற்கு என்னுடைய பிரார்த்தனைகள் மற்றும் வாழ்த்துகள்.” என யுவராஜ் தன் டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டு மீண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories