சினிமா

சுஷாந்த் மரணம் எதிரொலி: கரண் ஜோஹர், சல்மான் கான் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு - பாலிவுட்டில் சலசலப்பு!

பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான சல்மான் கான், தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சுஷாந்த் மரணம் எதிரொலி: கரண் ஜோஹர், சல்மான் கான் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு - பாலிவுட்டில் சலசலப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஞாயிறு அன்று மும்பையில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகர் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டதாக பாலிவுட் ஊடகங்கள் தெரிவித்தன.

சுஷாந்தின் மறைவு அவரது ரசிகர்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய திரையுலத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மரணத்தின் எதிரொலியாக சமூக வலைதளங்களிலும் நெட்டிசன்கள் மன அழுத்தம் தொடர்பாக பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வந்தனர்.

இதற்கிடையே, இந்தி திரையுலகில் திறமையான நடிகர்கள் இருக்கும் வேளையில், வாரிசு நடிகர்களுக்கே பெரும்பாலும் பட வாய்ப்புகள் வழங்கப்பட்டு பிரபலபடுத்தப்பட்டு வருவதாக சலசலப்பு எழுந்தது. இதனால் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் #Nepotism என்ற ஹேஷ்டேக் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு எதிராக நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர்.

சுஷாந்த் மரணம் எதிரொலி: கரண் ஜோஹர், சல்மான் கான் உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு - பாலிவுட்டில் சலசலப்பு!

மேலும், சுஷாந்த் சிங்கின் மரணமும் தற்செயலாக நடந்தது இல்லையென்றும் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் பகிரப்பட்டன. மேலும், தான் கடைசியாக நடித்த சிச்சோர் படத்தில் தற்கொலைக்கு எதிராக நடித்தவரே தற்கொலைக்கு ஆளாகியிருப்பது தொடர்பாகவும் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர்.

இதுமட்டுமல்லாமல், பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான கரண் ஜோஹர், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான் கான் ஆகியோர் மீதும் கடுமையாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. தோனி பயோபிக் படத்துக்கு பிறகு 2019 ‘சிச்சோர்’ படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு 7 பட வாய்ப்புகள் வந்துள்ளன. அதனை கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் தடுத்ததன் காரணமாகவே சுஷாந்த் தற்கொலைக்கு ஆளாகியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பீகார் மாநிலம் முசாஃபர்பூர் நீதிமன்றத்தில் சுதீர் குமார் ஓஜா என்பவர் சல்மான் கான், கரண் ஜோஹர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, தயாரிப்பாளர்கள் ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலை செய்ய தூண்டியதாக குற்றஞ்சாட்டி 306, 109, 504 மற்றும் 506 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசியுள்ள வழக்கறிஞர் சுதீர், “சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையில் இவர்களுக்கு தொடர்பிருப்பதாலேயே வழக்குப் பதிவு செய்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, ‘தபாங்’ படத்தை இயக்கிய அபினவ் சிங் காஷ்யப் தனக்கு பட வாய்ப்புகள் வரவிடாமல் சல்மான் கான் தடுத்ததாக குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், சுஷாந்த் மரணத்திலும் சந்தேகம் எழுந்ததை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories