சினிமா

ரீமேக் ஆகிறது 80'ஸ் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்... பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்?

தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் படமாக அமைந்த ‘முந்தானை முடிச்சு’ படம் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரீமேக் செய்யப்படவுள்ளது.

ரீமேக் ஆகிறது 80'ஸ் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்... பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1983ம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் பாக்யராஜ் இயக்கி நடித்த படம் ‘முந்தானை முடிச்சு’. ஊர்வசி, பூர்ணிமா பாக்யராஜ், தீபா, கே.கே.செளந்தர், பசி சத்யா, தவக்களை சிட்டிபாபு என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இளையராஜா இசையமைப்பில் உருவான இந்தப் படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியிலும் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்து 100 நாட்களுக்கும் மேல் திரையரங்குகளில் ஓடியது.

தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது 36 ஆண்டுகளுக்கு பிறகு ஏ.வி.எம் சரவணனனிடம் இருந்து முந்தானை முடிச்சு படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி சதீஷ் கைப்பற்றியுள்ளார்.

ரீமேக் ஆகிறது 80'ஸ் ப்ளாக்பஸ்டர் திரைப்படம்... பாக்யராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் சசிகுமார்?

இதையடுத்து, படத்தை ரீமேக் செய்வதற்கான ஆயத்தப் பணிகளில் தயாரிப்பு நிர்வாகம் இறங்கியுள்ளது. அதன்படி, பாக்யராஜ் நடித்த கதாபாத்திரத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் நடிக்க இருக்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக பாக்யராஜையும் படக்குழு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது. விரைவில் இதர நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் குறித்த விவரங்கள் கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாக்யராஜே ‘முந்தானை முடிச்சு’ ரீமேக் படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்கவும் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories