சினிமா

கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக செவிலியராக மாறிய நடிகை! #Corona

பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா, கொரோனா அச்சுறுத்தலையொட்டி தற்போது மும்பையில் செவிலியராக தன்னார்வத் தொண்டு செய்து வருகிறார்.

கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக செவிலியராக மாறிய நடிகை! #Corona
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இதுவரை 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 1199 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சூழலில், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஷாருக்கானின் ‘ஃபேன்’ திரைப்படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா தற்போது மும்பை ஜோகேஸ்வரியில் உள்ள பாலாசாகேப் தாக்கரே மருத்துவ மையத்தில் செவிலியராக தன்னார்வ தொண்டு செய்து வருகிறார்.

ஷிகா மல்ஹோத்ரா டெல்லியின் வர்தமான் மகாவீர் மருத்துவக் கல்லூரி மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனையில் நர்சிங் பட்டம் பெற்றவர். இதனால், கொரோனா ஆபத்துக் காலத்தில் செவிலியராகப் பணியாற்ற முடிவெடுத்திருக்கிறார்.

கொரோனா வைரஸிலிருந்து மக்களைக் காப்பாற்றுவதற்காக செவிலியராக மாறிய நடிகை! #Corona

தன்னார்வ செவிலியராகப் பணியாற்றி வரும் ஷிகா மல்ஹோத்ரா இதுகுறித்து சமூக வலைதளத்தில் கூறுகையில், “ஒரு செவிவியரைப் போலவும், பொழுதுபோக்கு கலைஞரைப் போலவும், உங்களின் ஆசீர்வாதம் இருந்தால் எப்போதும் என்னால் நாட்டிற்குச் சேவை செய்ய முடியும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மருத்துவம் சார்ந்த பட்டம் பெற்று பல்வேறு துறைகளில் பணியாற்றுபவர்கள் இந்த தொற்று நோய்க்கு எதிரான போராட்டத்தில் இதர மருத்துவர்களோடு இணைந்து களம் காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories