சினிமா

விஜய் 65க்காக உறுதியானது துப்பாக்கி 2? - மீண்டும் கூட்டு சேரும் சர்க்கார் கூட்டணி!

சர்காருக்கு பிறகு மீண்டும் விஜய்யை வைத்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் 65க்காக உறுதியானது துப்பாக்கி 2? - மீண்டும் கூட்டு சேரும் சர்க்கார் கூட்டணி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலையும், தாக்கத்தையும் ஏற்படுத்தி வந்த கொரோனா வைரஸ் குறித்த பேச்சு அண்மைக்காலங்களாக

இந்தியாவையும் தொற்றிக்கொண்டுள்ளது. இதனால், சமூக வலைதளங்கள், செய்தித் தாள்கள், தொலைக்காட்சி என எதில் கண்டாலும் கொரோனா தொடர்பான பேச்சுகளும், செய்திகளாகவே உலா வருகின்றன.

கூடவே, கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த நடைபெறவிருந்த அனைத்து கலை நிகழ்ச்சிகளும் சினிமா, சீரியல் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கூடவே தேசிய ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் புதுப் படங்கள் ரிலீசாவதில் தாமதம் ஏற்படும். இது இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவிலும் இதே நிலையே நீடிப்பதால் சினிமா தொழிலாளர்கள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தையும் பாதிப்பையும் சந்திக்க நேரிடுகிறது.

விஜய் 65க்காக உறுதியானது துப்பாக்கி 2? - மீண்டும் கூட்டு சேரும் சர்க்கார் கூட்டணி!

இப்படி இருக்கையில், தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட படமாக இருப்பது விஜய்யின் மாஸ்டர் திரைப்படம். கோடை விடுமுறையை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 9ம் தேதியன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஊரடங்கால் இந்த வெளியீடு தற்போது ஜூன் மாதத்துக்கு தள்ளிப்போகலாம் என கூறப்படுகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிலை கட்டுக்குள் வந்தால் மட்டுமே பட ரிலீஸ் தொடர்பான எவ்வித ஆருடங்களுக்கும் பதிலளிக்க முடியும்.

இதற்கிடையே விஜய்யின் ரசிகர்களுக்கு மாஸ்டர் படத்திற்கு இருக்கும் அதீத எதிர்ப்பார்ப்பு அவரது 65வது படத்துக்கும் இருந்து வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருந்த இந்த படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பேரெதிர்ப்பாப்பு இருந்து வந்தது. விஜய்யின் 65வது படத்துக்கான இயக்குநர் பட்டியல் நீண்டுக்கொண்டே இருந்து வந்தது.

இந்நிலையில், 2012ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியில் முதல் முதலில் உருவான துப்பாக்கி படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்து தேசிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முருகதாஸ் திட்டமிட்டு வருகிறார். ஆகையால், விஜய்யின் 65வது படம் முருகதாஸுடனான துப்பாக்கி 2 ஆக இருக்கும் என கோலிவுட்டில் பேசப்படுகிறது.

அதேச்சமயத்தில், கொரோனா அச்சம் காரணமாக திரை நட்சத்திரங்களும் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கின்றனர். அதில், இன்ஸ்டாகிராம் நேரலை மூலம் ரசிகர்களுடன் பேசிய நடிகை காஜல் அகர்வால், விரைவில் விஜய்யுடன் இணைந்து மீண்டும் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். காஜலின் இந்த பதில் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியதோடு ட்விட்டரிலும் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

மேலும், விஜய்க்கு இந்த படத்துக்கு 100 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல, துப்பாக்கி 2 படத்தில் ஹாரிஸ் ஜெயராஜுக்கு பதிலாக அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவுப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories