சினிமா

“எங்க நாடு இந்தியா” - மிரட்டும் ராஜுமுருகனின் ‘ஜிப்ஸி’ டீசர்!

‘ஜிப்ஸி’ படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியாகியுள்ளது.

“எங்க நாடு இந்தியா” - மிரட்டும் ராஜுமுருகனின் ‘ஜிப்ஸி’ டீசர்!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் இரண்டாவது டீசர் இன்று வெளியாகியுள்ளது.

‘குக்கூ’, ‘ஜோக்கர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியிருக்கும் படம் ‘ஜிப்ஸி’. லிம்பியா பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

ஜீவா, நடாஷா சிங் மற்றும் பலர் நடித்த ’ஜிப்ஸி’ திரைப்படம் சென்சார் போர்டின் முட்டுக்கட்டைகளால் முடங்கிக் கிடந்தது. இந்நிலையில், தடைகளை எல்லாம் கடந்து மார்ச் மாதம் 6ஆம் தேதியன்று திரைக்கு வரவுள்ளது.

சாலை பயணத்தில் ஏற்படும் காதலை மையமாக கொண்டு, சமூக விஷயங்களை முன்னிலைப்படுத்தி ‘ஜிப்ஸி’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது ஏற்கனவே இந்தப் படத்தின் டீசர், பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘ஜிப்ஸி’ படத்தின் டீசரை நடிகர் சூர்யா சற்றுமுன்பு வெளியிட்டுள்ளார். மனிதனின் சுதந்திரம் மனிதன் உருவாக்கிய சாதி மதம் போன்ற கொடிய விஷயங்களால் எவ்வாறு முடங்கிக் கிடக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதுபோல் இந்த டீஸர் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories