சினிமா

டீசர் அப்டேட் கேட்ட ரசிகர்கள்.. நச் பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. வைரல் வீடியோ!

மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் படபிடிப்புகள் நிறைவடைந்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

டீசர் அப்டேட் கேட்ட ரசிகர்கள்..  நச் பதில் கொடுத்த லோகேஷ் கனகராஜ்.. வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் மாஸ்டர் படத்துக்கு பெருமளவு எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எழுந்து வருகிறது. போஸ்டர் ரிலீசான சமயத்தில் இருந்து குட்டி ஸ்டோரி பாடல் வரை அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் நித்தமும் காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் ரசிகர்கள் மாஸ்டர் படம் குறித்த அப்டேட்டை கேட்டுள்ளனர். அதற்கு, பதிலளித்த அவர், படம் ரிலீசாவதற்கே இன்னும் நாற்பது நாட்கள் தான் இருக்கிறது. ஒரு வாரத்தில் படத்தின் புரோமோஷன்கள் தொடங்கிவிடும் எனக் கூறினார். அப்போது ரசிகர்கள் டீசர் வேண்டும் என கூச்சலிட அதற்கு டீசர் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என லோகேஷ் பதிலளித்தார்.

இதிலிருந்து படத்தின் ரிலீஸ் ஏப்ரல் 9ம் தேதி என தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை என்றாலும் இயக்குநரே கூறிவிட்டதால் ரசிகர்கள் குதூகலமாகியுள்ளனர். மேலும், இது தொடர்பான வீடியோவை விஜய் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

இப்படி இருக்கையில், மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் படபிடிப்பு பணிகள் முடிவடைந்ததாக குறிப்பிட்ட XB ஃபிலிம்ஸ் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டதோடு விஜய்க்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த ஃபோட்டோவையும் பகிர்ந்துள்ளது. இதனையடுத்து #MasterUpdate என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories