சினிமா

லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக மீண்டும் ரிலீசாகும் சிம்புவின் படம்.. அதுவும் சென்னையில்..

காதலர் தினத்தை முன்னிட்டு நடிகர் சிம்புவின் காதல் திரைப்படம் சிறப்பு காட்சியாக சென்னையில் உள்ள பிரபல திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.

லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக மீண்டும் ரிலீசாகும் சிம்புவின் படம்.. அதுவும் சென்னையில்..
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

உலகம் முழுவதும் நாளை (பிப்.,14) காதலர் தினம் கொண்டாடப்படவுள்ளது. தமிழகத்திலும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக காதலர்கள் பிரயத்தனமாகி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் காதலர் தினத்தை முன்னிட்டு சிம்புவின் படத்தை சிறப்பு திரையிடல் செய்யப்படவுள்ளது.

அதன்படி, கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படம் கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. தெலுங்கில் நாக சைதன்யாவும், சமந்தாவும் நடித்திருந்தனர்.

லவ்வர்ஸ் டே ஸ்பெஷலாக மீண்டும் ரிலீசாகும் சிம்புவின் படம்.. அதுவும் சென்னையில்..

முழுக்க முழுக்க காதலை மையப்படுத்திய எடுக்கப்பட்டிருந்த இந்த இளைஞர்கள் மத்தியில் ஜோரான வரவேற்பை பெற்றது. இன்றளவும் இந்த படத்தின் மீதான மவுசு இளைஞர்களிடத்தில் குறைந்தபாடியில்லை.

ஆகையால், காதலர் தின ஸ்பெஷலாகவும், விண்ணைத்தாண்டி வருவாயா ரிலீசாகி பத்து ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில், நாளை சென்னையில் உள்ள பிரபல தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்படவுள்ளது.

தியாகராயநகரில் உள்ள ஏஜிஎஸ், வேளேச்சேரி லூக்ஸ், ஈசிஆர் மாயாஜால் என மூன்று தியேட்டர்களில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் மீண்டும் திரையிடப்பட உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் வேகமாக புக் செய்யப்பட்டு வருகிறது.

banner

Related Stories

Related Stories