சினிமா

பாடல்களின் காப்புரிமையை வழங்கினால் வரியா? - ஏ.ஆர்.ரஹ்மான் மனுவுக்கு GST ஆணையருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் !

படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கியதற்கு ஜிஎஸ்டி விதித்ததற்கு எதிராக ஏ.ஆர்.ரஹ்மான் தொடந்த வழக்கில் ஜிஎஸ்டி ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடல்களின் காப்புரிமையை வழங்கினால் வரியா? - ஏ.ஆர்.ரஹ்மான் மனுவுக்கு GST ஆணையருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திரைப்படங்களுக்கு இசையமைத்த பாடல்களின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்தும்படி, பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இசையமைப்பாளர் ஒருவர் தன் படைப்புகளின் முழு காப்புரிமை உரிமையாளராக உள்ளார். பின், அந்த உரிமையை பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கி விட்டால், சம்பந்தப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.

பாடல்களின் காப்புரிமையை வழங்கினால் வரியா? - ஏ.ஆர்.ரஹ்மான் மனுவுக்கு GST ஆணையருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் !

இந்நிலையில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, சேவை வரி செலுத்த வேண்டும் என சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) ஆணையர், நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்கக் கோரியும், ஏ.ஆர்.ரஹ்மான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

பாடல்களின் காப்புரிமையை வழங்கினால் வரியா? - ஏ.ஆர்.ரஹ்மான் மனுவுக்கு GST ஆணையருக்கு ஐகோர்ட் நோட்டீஸ் !

அந்த மனுவில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அந்த காப்புரிமையின் உரிமையாளர்கள் பட தயாரிப்பாளர்கள்தான் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். காப்புரிமையை நிரந்தரமாக வழங்குவது சேவையல்ல என்பதால், சேவை வரி விதிப்பது தவறு எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு மார்ச் 4ம் தேதி வரை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மானின் மனு மீது இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., ஆணையருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories