சினிமா

திடுதிப்பென ‘மாஸ்டர்’ அப்டேட் கொடுத்த படக்குழு... அதகளம் செய்யும் விஜய் ரசிகர்கள் !

விஜய்யின் ‘மாஸ்டர்’ படம் குறித்த முக்கிய அப்டேட்டை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது படக்குழு.

திடுதிப்பென ‘மாஸ்டர்’ அப்டேட் கொடுத்த படக்குழு... அதகளம் செய்யும் விஜய் ரசிகர்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2020ம் ஆண்டின் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ள விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்துக்கு உண்டான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சென்னை, டெல்லி, கர்நாடகா என படப்பிடிப்புகளை முடித்துவிட்டு நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்புக்கு இடையே வருமான வரித்துறை சோதனை, விசாரணை என நடிகர் விஜய் சர்ச்சைகளை பல்வேறு எதிர்கொண்டாலும், ரசிர்களை சந்தித்து அவர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.

நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டு சமூக வலைதளங்களை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறார் நடிகர் விஜய். இந்நிலையில், ‘மாஸ்டர்’ படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து அவர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது படக்குழு.

ட்விட்டரில்இன்று வெளியான அறிவிப்பில், வருகிற 14ம் தேதி காதலர் தினத்தன்று ‘மாஸ்டர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஒரு குட்டி கதை’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடல் ரிலீஸாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து, #MasterUpdate #OruKuttiKathai ஆகிய ஹேஷ்டேக்குகளை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பொதுவாக, விஜய் தனது படத்தின் இசை வெளியீட்டின்போது குட்டிக் கதைகளைச் சொல்லி ரசிகர்களை மகிழ்விப்பார்.

தற்போது ‘மாஸ்டர்’ படத்தின் பாடலில் ‘ஒரு குட்டி கதை’ என இருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, படத்தின் இயக்குநர், நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களை வெளியிட்ட படக்குழு இதுவரையில் ‘மாஸ்டர்’ படத்துக்கு யார் பாடலாசிரியர் என்பதை வெளிப்படுத்தாமலே உள்ளது.

ஆகையால், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை யார் எழுதியிருப்பார் என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

banner

Related Stories

Related Stories