சினிமா

திடீர் திருமணம் செய்துகொண்ட நடிகர் யோகிபாபு... வைரலாகும் புகைப்படங்கள்!

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இன்று காலை திடீர் திருமணம் நடைபெற்றுள்ளது.

திடீர் திருமணம் செய்துகொண்ட நடிகர் யோகிபாபு... வைரலாகும் புகைப்படங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கும், மஞ்சு பார்கவி என்பவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றுள்ளது.

நகைச்சுவை நடிகர் யோகிபாபு இன்று காலை சென்னையைச் சேர்ந்த மஞ்சு பார்கவியை மணமுடித்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே யோகிபாபுவின் பூர்வீக கிராமத்தில் இந்தத் திருமணம் நடைபெற்றது.

செய்யாறு அருகே வாழைப்பந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் நடிகர் யோகி பாபு. திரைத்துறையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி ததனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். பிரபல நடிகர்கள், நடிகைகளுடன் நடித்து நகைச்சுவை நடிப்பால் உச்சம் தொட்டவர்.

திடீர் திருமணம் செய்துகொண்ட நடிகர் யோகிபாபு... வைரலாகும் புகைப்படங்கள்!

யோகிபாபுவின் திருமணம் குறித்து பொதுவெளியில் வெளிப்படையாகவே கேள்வி எழுந்துவந்த நிலையில், அவரது திடீர் திருமணம், அந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்த திருமண நிகழ்வில் அவரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் உள்ளிட்டோர் மட்டுமே பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் யோகிபாபுவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.

banner

Related Stories

Related Stories