சினிமா

தடையை மீறி இணையத்தில் வெளியானது ‘தர்பார்’ ?; படக்குழு அதிர்ச்சி!

ரஜினியின் தர்பார் படம் ரிலீசான சில மணி நேரங்களிலேயே இணையத்தில் வெளியானது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தடையை மீறி இணையத்தில் வெளியானது ‘தர்பார்’ ?; படக்குழு அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் முதல் முறையாக உருவாகியுள்ள படம் தர்பார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று உலகம் முழுவதும் இந்த படம் ரிலீசாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்கு பிறகு தர்பார் படத்தில் போலிஸ் அதிகாரியாகவும், அருணாச்சலம் என்ற பெயரிலும் ரஜினி நடித்துள்ளார். படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி இருந்ததால் சிறப்பு காட்சிகளுக்கு முண்டியடித்து டிக்கெட் வாங்கி படத்தை பார்த்துள்ளனர்.

இதுவரையில் தர்பார் படத்துக்கு கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், பெரும்பாலோனோர் ஒருமுறை பார்க்கலாம் என்ற வகையிலேயே கருத்து தெரிவிக்கின்றனர்.

தடையை மீறி இணையத்தில் வெளியானது ‘தர்பார்’ ?; படக்குழு அதிர்ச்சி!

இந்நிலையில், படம் ரிலீசாகி அரை நாள் கூட முழுமை அடைவதற்குள் இணையத்தில் தர்பார் வெளியாகியுள்ளது என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே தர்பார் படத்தை சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட தடை கேட்டு லைகா நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சுமார் 1370 இணையதளங்களில் வெளியிட தடை விதித்திருந்தது சென்னை உயர் நீதிமன்றம்

இவ்வளவு கெடுபிடிகளையும் மீறி இணையத்தில் தர்பார் படம் வெளியாகியுள்ளது என்ற செய்தி படக்குழு மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories