சினிமா

தனுஷ் படத்துக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு - என்ன செய்யப்போகிறது படக்குழு?

மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படத்துக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தனுஷ் படத்துக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு - என்ன செய்யப்போகிறது படக்குழு?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கார்த்திக் சுப்பராஜின் 'D40', துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பட்டாஸ்' ஆகிய படங்களில் நடித்து முடித்திருக்கும் தனுஷ் தற்போது மாரி செல்வராஜின் இயக்கத்திலான 'கர்ணன்' படத்தில் இணைந்துள்ளார்.

இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு பணிகள் கடந்த 3ம் தேதி பூஜையுடன் தொடங்கியது. ‘அசுரன்’ படத்துக்குப் பிறகு இந்த படத்தையும் கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் கர்ணன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும், மலையாளர் நடிகர் லால் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் திருநெல்வேலியில் நடைபெற்று வரும் நிலையில், கர்ணன் என்ற தலைப்பை மாற்றக் கோரி தயாரிப்பாளர் எஸ்.தாணுவுக்கு நடிகர் திலகம் சிவாஜியின் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவைத் தலைவர் சந்திரசேகரன் எழுந்தியுள்ள கடிதத்தில், “நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான கர்ணன் படத்தின் பெயரை உங்கள் படத்திற்கு வைத்துள்ளதாக அறிந்தோம்.

இது அவருடைய தீவிர ரசிகர்களுக்கு வருத்தமளிப்பதாக உள்ளது. ஆகையால் தனுஷ் நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டிலுக்கு முன்போ அல்லது பின்போ வேறு ஏதேனும் பெயரை சேர்த்துக்கொண்டால் நல்லது. இந்தக் கோரிக்கையை ஏற்பீர்கள் என நம்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே விக்ரம் நடிப்பில் உருவான தெய்வத் திருமகள் படத்திற்கும் தெய்வமகன் என சிவாஜி பட டைட்டிலை வைத்திருந்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால் டைட்டில் மாற்றப்பட்டது. அதேபோல தனுஷின் படத்துக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் டைட்டில் மாற்றப்படுமா என பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories