சினிமா

#CAA சட்டத்தை எதிர்த்த அனுராக் : ட்விட்டரில் குறைந்த Followers - பின் வாசல் வழியைக் கையாள்கிறதா பா.ஜ.க ?

பா.ஜ.கவுக்கு எதிராக பதிவிட்டதால், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப்பை ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை திடீரென குறைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

#CAA சட்டத்தை எதிர்த்த அனுராக் : ட்விட்டரில் குறைந்த Followers - பின் வாசல் வழியைக் கையாள்கிறதா பா.ஜ.க ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ஜ.க ஆட்சியில் நாட்டில் நிலவும் பாலியல் வன்முறைகள், பொருளாதார சரிவு உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல துறை சார்ந்த பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தனர். அதில், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தன்னுடைய எதிர்ப்பையும் பதிவு செய்திருந்தார்.

சமூகத்தில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தவறாமல் குரல் கொடுத்து அதற்காக போராடுபவர்களுக்கு தனது ஆதரவை அளித்து வருபவர் அனுராக் காஷ்யப். அதன் பிறகு காஷ்மீருக்கான சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு கடுமையாக மோடி அரசை விமர்சித்து ட்விட்டரில் அனுராக் பதிவிட்டிருந்தார்.

அதனால் பல வகையில் அவரது குடும்பத்தினருக்கு மிரட்டல்கள், விமர்சனங்கள் வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அவர், சமூக வலைதளங்களில் இருந்து சற்று ஒதுங்கி இருந்தார்.

#CAA சட்டத்தை எதிர்த்த அனுராக் : ட்விட்டரில் குறைந்த Followers - பின் வாசல் வழியைக் கையாள்கிறதா பா.ஜ.க ?

இந்நிலையில், கடந்த டிசம்பர் 15ம் தேதி குடியுரிமை சட்டத்தில் பா.ஜ.க திருத்தம் மேற்கொண்டு இஸ்லாமியர்களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கா வண்ணம் சட்டம் இயற்றியதை அடுத்து மீண்டும் ட்விட்டருக்கு திரும்பிய அனுராக் காஷ்யப், “இது கையை மீறி போய்விட்டது. இனியும் அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை. இந்த அரசு பாசிசத்தை கடைபிடிப்பது தெளிவாகியுள்ளது. மேலும், மாற்றத்தை ஏற்படுத்த நினைப்பவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருப்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது” என பதிவிட்டிருந்தார்.

அதன் பிறகு தொடர்ச்சியாக பா.ஜ.க அரசை விமர்சித்தும், குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுபவர்களுக்கு ஆதரவாகவும் அனுராக் காஷ்யப் ட்விட்டரில் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் (டிச.,20) “காஷ்மீரை போன்ற மற்ற மாநிலங்களையும் மாற்றுவதற்கு மோடி-ஷா கூட்டணி முயற்சித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் அச்சத்தை கொடுக்கிறது. மேலும், நீங்கள் அஞ்சுவதை விட அவர்களது ஈகோ அபாயகரமானது.

பா.ஜ.க.,வினருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் வன்முறையை ஏற்படுத்த நினைப்பதாக பா.ஜ.க தொழில்நுட்ப பிரிவினர் சமூக வலைதளங்களில் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். ஆகையால் தயவு செய்து அரசியல் கட்சிகள் மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் தனித்தனியாக உங்களது போராட்டத்தை மேற்கொள்ளுங்கள்.

அப்படி செய்தால் மட்டுமே அவர்களை நம்மாள் பிரிக்க முயலும். படிக்காத இருவரை நாம் கையாளுகிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்” என அனுராக் பதிவிட்டிருந்தார். இவரது ட்விட்டர் பதிவுகள் வைரலானதால் பா.ஜ.கவினரை கோபமடைய வைத்துள்ளது.

இந்நிலையில், நேற்று முதல் அனுராக் காஷ்யப் ட்விட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 5 லட்சத்துக்கும் மேலானோர் அனுராக்கை பின்தொடர்ந்து வந்த நிலையில், தற்போது 75 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும், அனுராக் காஷ்யப்பை எவரும் Unfollow செய்யாமல் தானாகவே இது நடந்துள்ளது பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில், பா.ஜ.க அரசை விமர்சித்து அனுராக் காஷ்யப் பதிவிட்டதால் சமூகத்தில் அவரது கருத்துகள் மக்களைச் சென்று சேராத வண்ணம் நடவடிக்கையை பா.ஜ.க மேற்கொண்டுள்ளதாக பலர் சந்தேகம் அடைந்துள்ளனர்.

மக்களிடம் தொலைத் தொடர்பு வசதிகளை தன் வசப்படுத்தி, சர்வாதிகாரப் போக்கை கையாண்டு வரும் பா.ஜ.க, இதை வெளியப்படையாகச் செய்துள்ளது என்றும், இது அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலையைப் போல் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories