சினிமா

விஜய் - வெற்றிமாறன் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறதா Vijay65 ?

64வது படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய் அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் நடிப்பது உறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் - வெற்றிமாறன் கூட்டணியில் வெறித்தனமாக உருவாகிறதா Vijay65 ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2019ம் ஆண்டில் பாக்ஸ் ஆஃபிஸ் மற்றும் விமர்சன ரீதியில் வெற்றிபெற்ற படங்களில் வெற்றிமாறன் - தனுஷின் அசுரன் படமும் ஒன்று. இந்த படத்தை அடுத்து வெற்றிமாறன் சூரியை வைத்து படம் இயக்கவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

ஆனால், பாலிவுட்டில் ஆந்தாலஜி முறையில் தமிழிலும் உருவாகும் வெப்சீரிஸை முடித்துவிட்டு சூரி படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தெரிவிக்கப்பட்டது.

அசுரன் வெளியான சமயத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் உறுதியான தகவல்கள் வெளியானது. அதற்கான கால்ஷீட்டையும் சூர்யா ஒதுக்கியதாகவும் கூறப்பட்டது. இந்த படத்துக்கு கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பதாகவும் தகவல் வெளியான நிலையில், அது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது.

இதனையடுத்து, விஜயின் தளபதி 64 படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த சமயத்தில் அவரை வெற்றிமாறன் சந்தித்தது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது விஜயிடம் வெற்றிமாறன் கதை சொல்லியிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிப்பிலான படம் உறுதியாகியுள்ளது என்றும், சூரியுடனான படத்தை 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முடித்த பிறகு V-V-V கூட்டணியின் படம் தொடங்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கூடுதல் தகவலாக விஜய் வெற்றிமாறன் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இரண்டு பாடல்களுக்கு இசையமைத்து வைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வித்தியாசமான கதைகளங்களை கொண்டு இயக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜயின் படம் உருவாகவுள்ளது என்ற தகவல் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக ‘காத்திருப்போம்’.

banner

Related Stories

Related Stories