சினிமா

சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ நாளை ரிலீஸ் : நீக்கப்பட்ட காட்சியால் அதிகரித்த எதிர்பார்ப்பு !

ஹீரோ படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியானதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் ‘ஹீரோ’ நாளை ரிலீஸ் : நீக்கப்பட்ட காட்சியால் அதிகரித்த எதிர்பார்ப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சிவகார்த்திகேயன் - கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம். வங்கிக்கடன் மோசடி, கிரெடிட் கார்டு தகவல் திருட்டு உள்ளிட்ட மோசடிகளை ‘இரும்புத்திரை’ படத்தின் மூலம் வெளிக்காட்டிய இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படமே இந்த ’ஹீரோ’.

இதில் இவானா, ரோபோ ஷங்கர், அர்ஜூன், பாலிவுட் நடிகர் அபய் தியோல் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

கல்வித்துறையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள ஹீரோ படம் நாளை (டிச.,20) ரிலீசாக இருக்கிறது. இந்நிலையில் ஹீரோ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி யூ ட்யூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், பொதுத்தேர்வில் தோல்வியுறும் மாணவர்களின் மனநிலையை கையாள்வது குறித்து வகையில் காட்சியமைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 10 லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை ஈர்த்து யூ ட்யூப் ட்ரெண்டிங்கிலும் முன்னிலையில் உள்ளது.

மேலும், இந்தக் காட்சியை ஏன் படத்தில் இருந்து நீக்கினீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நம்ம வீட்டுப் பிள்ளை படத்திற்கு முன் வந்த படங்களான சீமராஜா, மிஸ்டர் லோக்கல் ஆகிய சிவகார்த்திகேயன் படங்கள் அவ்வளவாக ரசிகர்களை ஈர்க்காததால் ஹீரோ படத்தின் நீக்கப்பட்ட காட்சி ரசிகர்களின் ஆவலை அதிகரிகரித்துள்ளது.

banner

Related Stories

Related Stories