சினிமா

உருவாகிறது விஜய் - வெற்றிமாறன் கூட்டணி? - கோலிவுட்டில் பரவும் புதிய தகவல்!

சூரியை வைத்து படம் இயக்கவிருக்கும் வெற்றிமாறன் சமீபத்தில் விஜயை சந்தித்துள்ளது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உருவாகிறது விஜய் - வெற்றிமாறன் கூட்டணி? - கோலிவுட்டில் பரவும் புதிய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய். கேங்ஸ்டர்ஸ் மற்றும் கல்வி சார்ந்த கதையாக இந்த படம் உருவாகி வருகிறது என கூறப்படுகிறது.

படத்துக்கு டைட்டில் ஏதும் அறிவிக்கப்படாததால் விஜய் 64 என அழைக்கப்பட்டு வருகிறது. மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு, விஜே ரம்யா, கவுரி கிஷன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்

2020ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு படம் வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம்ஸ் கிரியேட்டர்ஸ் அறிவித்திருந்தது. அதனையடுத்து படத்தின் ஷூட்டிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விஜய் 64 படத்தை அடுத்து, அவரது 65வது படத்தை யார் இயக்க இருக்கிறார்கள் என பல்வேறு செய்திகள் கோலிவுட் வட்டாரத்தில் வலம் வருகிறது. விஜய் 64 ஷூட்டிங்கின் போது இயக்குநர் மகிழ் திருமேனி விஜயை சந்தித்து கதை கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், அசுரன் படத்துக்கு பிறகு வெப் சீரிஸ் இயக்கவிருக்கும் வெற்றிமாறன் சூரியை வைத்து படம் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அண்மையில் விஜய் - வெற்றிமாறன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இது மரியாதை நிமித்தமாகவும், நட்பு ரீதியாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டாலும், வெற்றிமாறனின் இயக்கத்திலான படத்தில் நடிப்பதற்கு விஜய் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், விஜயின் 66வது படமாக அமையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. அவ்வாறு விஜய் - வெற்றிமாறன் கூட்டணி உருவானால் ரசிகர்களுக்கு நிச்சயம் டபுள் தமாக்கா ஆஃபர் போன்று அமையும்.

banner

Related Stories

Related Stories