சினிமா

தடம் பதித்த திருநங்கைகள் : ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் அனிருத் !

திருநங்கைகள் மூவருக்கு ’தர்பார்’ திரைப்படத்தில் பாட இசையமைப்பாளர் அனிருத் வாய்ப்பு கொடுத்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தடம் பதித்த திருநங்கைகள் : ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் அனிருத் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினின் நடிப்பில், ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தர்பார்’ படத்தில் இடம்பெற்ற ’சும்மா கிழி...’ பாடல் அண்மையில் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி இருக்கையில், நாளை மறுநாள் (டிச.,7) மாலை 5 மணியளவில் சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.

பிரமாண்டமாக நடைபெறவுள்ள ஆடியோ வெளியீட்டு விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடம் பதித்த திருநங்கைகள் : ரஜினியின் ‘தர்பார்’ படத்தில் வாய்ப்பு கொடுத்த இசையமைப்பாளர் அனிருத் !

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி ரிலீசாகவிருக்கும் ரஜினியின் தர்பார் படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தர்பார் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றை ஹைதராபாத்தைச் சேர்ந்த திருநங்கைகள் சந்திரமுகி, ரச்சனா, பிரியா ஆகிய மூவர் பாடியுள்ளனர். மேலும், அந்த பாடலில் இந்த மூவரும் நடனமும் ஆடியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஒருசிலர் திருநங்கைகளை ஏளனமாக சித்தரித்தாலும், அதைப்பற்றி எல்லாம் வருந்தால் அவர்கள் தொடர்ந்து தங்களது முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து அனைத்துத் துறைகளிலும் அவர்களின் திறமைகள் வெளிப்பட்டுக்கொண்டே உள்ளது எனவும், திருநங்கைகளை பாட வைத்ததற்கு இசையமைப்பாளர் அனிருத்துக்கு வாழ்த்து தெரிவித்து நெட்டிசன்களும், ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories