சினிமா

டோலிவுட் டூ பாலிவுட் : இந்தியில் தயாராகிறது சைக்கோ க்ரைம் த்ரில்லர் ‘ராட்சசன்’ ?

விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த ராட்சசன் படம் தெலுங்கை அடுத்து இந்தியிலும் ரீமேக் ஆகவுள்ளது.

டோலிவுட் டூ பாலிவுட் : இந்தியில் தயாராகிறது சைக்கோ க்ரைம் த்ரில்லர் ‘ராட்சசன்’ ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் விஷ்னு விஷால், அமலாபால், ‘அம்மு’ அபிராமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் ராட்சசன். ராம் குமார் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் படமான ராட்சசன் உலக அளவில் கவனம் ஈர்த்ததோடு, அமெரிக்காவின் லாஃபா விருதையும் பெற்றது.

தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து, தெலுங்கில் ராட்சசன் படம் ’ராக்‌ஷசுடு’ என்ற பெயரில் ரீமேக்காகி வெளியிடப்பட்டது. அங்கும் சக்கப்போடு போட்டதை அடுத்து, தற்போது இந்த படம் இந்தியிலும் ரீமேக் ஆக உள்ளது.

ராட்சசன் படத்தில் விஷ்ணு விஷால் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகரும், தேசிய விருது பெற்றவருமான ஆயுஷ்மான் குரானா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே போலிஸ் கெட்டப்பில் ஆயுஷ்மான் நடிப்பில் வெளியான Article 15 திரைப்படம் அமோக வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், ராட்சசன் ரீமேக் உரிமையை பெற்றுள்ள நடிகர் விஷ்ணு விஷாலே Axess film factory உடன் இணைந்து அதன் இந்தி ரீமேக்கை தயாரிக்க இருப்பதாகவும் கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. கூடிய விரைவில், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories