சினிமா

சென்னையில் மீண்டும் தொடங்கிய ‘விஜய் 64’ ஷூட்டிங் : விஜய்யை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!

‘விஜய் 64’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் தொடங்கியுள்ளது.

சென்னையில் மீண்டும் தொடங்கிய ‘விஜய் 64’ ஷூட்டிங் : விஜய்யை காண ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வருகிறது விஜய் 64 / தளபதி 64. இப்படத்தில் மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, அர்ஜூன் தாஸ், ஆண்ட்ரியா, விஜே ரம்யா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

2020 கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிடவுள்ளதாக தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி ஃபிலிம்ஸ் அறிவித்தது. ‘கத்தி’ படத்துக்குப் பிறகு ‘விஜய் 64’க்கு அனிருத் இசையமைக்கிறார்.

சென்னை, டெல்லி என படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இதனையடுத்து, அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழு கர்நாடகா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது டெல்லி ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பியுள்ளது படக்குழு. கர்நாடகாவில் மழை பெய்து வருவதால் சென்னையில் மீண்டும் ‘விஜய் 64’ படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 8ம் தேதி வரை சென்னையில் குறுகிய கால படப்பிடிப்பு நடக்கவுள்ளது என்றும், டிசம்பர் 10ம் தேதி கர்நாடகாவுக்கு ‘விஜய் 64’ படக்குழு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஷூட்டிங் நடைபெறுகிறது என தகவல் வெளியானதை அடுத்து, விஜய்யை காண்பதற்காக அவரது ரசிகர்கள் ஆவலாகியுள்ளனர்.

banner

Related Stories

Related Stories