சினிமா

“நெருப்பு பேரோட நீ கொடுத்த ஸ்டாரோட” : வெளியானது தர்பாரின் ‘சும்மா கிழி’ !

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் தர்பார் படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ ரிலிசானது.

“நெருப்பு பேரோட நீ கொடுத்த ஸ்டாரோட” : வெளியானது தர்பாரின் ‘சும்மா கிழி’ !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஜனவரி 9ம் தேதி ரஜினியின் தர்பார் படம் ரிலீசாகவுள்ளதால் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் படு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும் டிசம்பர் 7ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இன்று மாலை 5 மணியளவில் ரஜினியின் இன்ட்ரோ பாடலாக உருவாகியுள்ள சும்மா கிழி என்ற பாடல் ரிலீசாகவுள்ளது என அறிவிக்கப்பட்டது. அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார்.

நேற்று (நவ.,26) மாலை 7 மணியளவில் சும்மா கிழி பாடலின் வரிகளை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டார்.

அது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், பாடல் எந்த அளவில் இருக்கும் என ரசிகர்களிடம் தீவிரமான எதிர்பார்ப்பு நிலவியது. இதனையொட்டி ட்விட்டரில் #DarbarFirstSingleBlastToday என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.

இந்நிலையில் சரியாக 5 மணியளவில், தர்பாரின் முதல் சிங்கிள் ட்ராக் சும்மா கிழி பாடலை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories