சினிமா

பிரபல குணச்சித்திர நடிகர் பாலா சிங் காலமானார்!

தமிழ்த் திரையுலகின் பிரபல குணச்சித்திர நடிகரான நடிகர் பாலா சிங் உடல்நலக் குறைவால் காலமானார்.

பிரபல குணச்சித்திர நடிகர் பாலா சிங் காலமானார்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

நடிகர் நாசர் இயக்கத்தில் உருவான அவதாரம் படத்தின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பாலாசிங். குணச்சித்திர மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்றார். அடிப்படையில் இவர் ஒரு நிஜ நாடகக் கலைஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியன், புதுப்பேட்டை, விருமாண்டி உள்ளிட்ட படங்கள் இவரது திரை வாழ்க்கையில் மைல்கல்லாக அமைந்தது. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது.

பிரபல குணச்சித்திர நடிகர் பாலா சிங் காலமானார்!

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார்.

நடிகர் பாலா சிங்கின் மறைவு தமிழ்த் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலா சிங்கின் மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories