சினிமா

“இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு” : ENPT ரிலீஸ் குறித்து படக்குழு சூசகம்!

எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் வெளியீடு குறித்து ஹேஷ்டேக் பதிவிட்டு உறுதிப்படுத்தியுள்ளது படக்குழு.

“இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு” : ENPT ரிலீஸ் குறித்து படக்குழு சூசகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கௌதம் மேனன் இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்திருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. மேகா ஆகாஷ், சசிகுமார் என பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் 2 ஆண்டுகளுக்கே முன்பே முடிவடைந்தாலும் ரிலீசாவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு தள்ளிப்போனது.

“இறங்கி அடிக்கலாம்னு முடிவு பண்ணியாச்சு” : ENPT ரிலீஸ் குறித்து படக்குழு சூசகம்!

இந்நிலையில், படத்தின் தமிழக உரிமையை ஐசரி கணேஷின் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் வாங்கியிருப்பதால் நாளை மறுநாள் (நவ.,29) இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.

இதுகாறும், படம் ரிலீஸாகும் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்ததால் தற்போதும் ரிலீஸாகுமா என்ற சந்தேகத்திலேயே ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டுள்ள படக்குழு, அதில் #ErangiAdikkalaamnuMudivuPanniyaachu என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு 156 நிமிடம் 15 நொடிகள் ஓடக்கூடிய படத்தின் ரன்னிங் நேரத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளனர்.

இதன் மூலம், தனுஷ்-கௌதம் மேனனின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எனை நோக்கி பாயும் தோட்டா படம் நாளை மறுநாள் நிச்சயம் வெளியாகும் என படக்குழு உறுதிபடுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories