சினிமா

இன்னும் சற்று நேரத்தில் ‘சும்மா கிழி..’ பாடல் வரிகள் : ரஜினி தர்பார் அப்டேட் கொடுத்த பாடலாசிரியர் விவேக்

’தர்பார்’ படத்தின் சும்மா கிழி பாடல் தொடர்பான புது அப்டேட் வெளியிட்டுள்ளார் பாடலாசிரியர் விவேக்.

இன்னும் சற்று நேரத்தில் ‘சும்மா கிழி..’ பாடல் வரிகள் : ரஜினி தர்பார் அப்டேட் கொடுத்த பாடலாசிரியர் விவேக்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ’தர்பார்’ படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் பாடலான ’சும்மா கிழி’ நாளை ரிலீசாக இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்திருந்தது.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற டிச.,7ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை ரஜினியின் அறிமுகப் பாடலாக எஸ்.பி.பி குரலில், அனிருத் இசையில் உருவாகியுள்ள சும்மா கிழி பாடலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ’சும்மா கிழி’ என்று தொடங்கும் பாடலை எழுதியுள்ள பாடலாசிரியர் விவேக், பாடல் வரிகள் இன்று மாலை 7 மணிக்கு வெளியிட இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சும்மா கிழி பாடலின் 4 வரிகள் ட்விட்டரில் வெளியானதாக தகவல் பரவின. அதற்கே ரசிகர்கள் ஆரவாரமாக வரவேற்பு தெரிவித்த நிலையில், தற்போது பாடல் வரிகள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானதும் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.

நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள ரஜினியின் தர்பார் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories