சினிமா

தென்னிந்திய டப்பிங் யூனியனில் முறைகேடு: ராதாரவி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை ஐகோர்ட் கேள்வி

டப்பிங் சங்கத்தில் ராதாரவி முறைகேட்டில் ஈடுபட்டது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

தென்னிந்திய டப்பிங் யூனியனில் முறைகேடு: ராதாரவி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - சென்னை ஐகோர்ட் கேள்வி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தென்னந்திய டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதன் தலைவர் ராதாரவி மீதான புகாரின் மீது எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தொழிற்சங்க பதிவாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தென்னிந்திய டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனின் பொதுக்குழு கூட்டம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சங்கத்தின் வரவு, செலவு கணக்குகளை முறையாக பராமரிக்காத சங்கத்தின் தலைவர் ராதாரவி மற்றும் செயலாளர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட சங்கத்தின் உறுப்பினர்கள் மயிலை குமார், காளிதாஸ் உள்ளிட்ட மூன்று பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த மனுவில், சங்கத்தில் அனுமதிக்கப்பட்டதை விட அதிக சந்தா வசூலிக்கப்படுவதாகவும், சங்க நிதி மேலாண்மையில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக தொழிற்சங்க பதிவாளரிடம் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், சங்க தலைவர் ராதாரவிக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை அறிக்கையாக தாக்கல் செய்ய தொழிற்சங்க பதிவாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

banner

Related Stories

Related Stories