சினிமா

‘95 ல் கமல் நடித்த படத்தின் ரீமேக்காக உருவாகிறதா விஜய் 64?’ - பரபரப்புத் தகவல்கள்!

விஜயின் 64வது படம் உருவாகி வரும் நிலையில், படத்தின் கதை குறித்த செய்திகளுக்கு படக்குழு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

‘95 ல் கமல் நடித்த படத்தின் ரீமேக்காக உருவாகிறதா விஜய் 64?’ - பரபரப்புத் தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிகில் படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்துக்காக நடித்து வருகிறார் விஜய். தலைப்பு ஏதும் வைக்கப்படாததால் தற்காலிகமாக தளபதி 64 என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை, டெல்லி என படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங்கில் விஜய் நடிப்பது போன்ற புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகமூட்டி வருகிறது.

அதில், கல்லூரி மாணவர் போன்ற கெட்டப்பில் விஜய் உலா வருவது போன்ற போட்டோக்கள் உள்ளதால் என்ன மாதிரியான கதையம்சத்தில் படம் உருவாகி வருகிறது என்ற ஆவலும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

‘95 ல் கமல் நடித்த படத்தின் ரீமேக்காக உருவாகிறதா விஜய் 64?’ - பரபரப்புத் தகவல்கள்!

இந்நிலையில் விஜய் 64 படம் கல்லூரியில் படமாக்கப்பட்டு வருவதால் மாணவராக, பேராசிரியராக விஜய் நடிக்கிறார் என தகவல் வெளியானது. மேலும், கமல் நடிப்பில் 1995ல் வெளியான நம்மவர் படத்தின் ரீமேக்காக இருக்கக் கூடும் எனவும் பேசப்பட்டு வருகிறது.

ஏனெனில், கைதி பட ரிலீசுக்கு பிறகு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கைதி படத்துக்கு கமலின் விருமாண்டி படத்தை ரெஃபெரன்ஸாக எடுத்துக்கொண்டதாகவும், தனக்கு கமலை பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதனை வைத்து, விஜய் 64 படம் நம்மவர் படத்தின் ரீமேக்காக இருக்கக் கூடும் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த செய்தியை அறிந்த விஜய் 64 படக்குழு, அதனை மறுத்தும், அந்த தகவல் உண்மையில்லை என்றும் கூறியுள்ளது. மேலும், தளபதி 64 படம் கேங்ஸ்டர் பின்னணி கொண்டவராகவும், குடிகார பேராசிரியராகவும் விஜய் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் தொடர்பாக படக்குழு விளக்கமளிக்கவில்லை.

‘95 ல் கமல் நடித்த படத்தின் ரீமேக்காக உருவாகிறதா விஜய் 64?’ - பரபரப்புத் தகவல்கள்!

ஆகையால், விஜய் 64 படம் எந்த மாதிரியான கதையை கொண்டு உருவாகிறது என ஆவல் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வரவுள்ளது.

படத்தில், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷன், ப்ரிகிதா, ரம்யா என பலர் நடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories