சினிமா

இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் - உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ’சைகோ’ படத்தின் சிங்கிள் டிராக் !

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் ’சைக்கோ’ படத்தின் Single Track இன்று வெளியானது.

இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் - உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ’சைகோ’ படத்தின் சிங்கிள் டிராக் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுவாரஸ்யமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்தப் படம் ’சைக்கோ’. இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியுள்ளார்.

சைக்கோ படத்தில் பார்வை சவால் கொண்டவராக நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். மேலும், நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க, பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இளையராஜா இசையில் சித் ஸ்ரீராம் - உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ’சைகோ’ படத்தின் சிங்கிள் டிராக் !

அண்மையில் வெளியான சைக்கோ படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான ஆவலை தூண்டியுள்ள நிலையில், இளையராஜா இசையில் சைக்கோவின் சிங்கிள் ட்ராக் இன்று ரிலீசாவதாக படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், சைக்கோ படத்தில் இடம்பெற்றுள்ள ’உன்ன நெனச்சி..’ என்கிற பாடல் Sony Music South தளத்தில் வெளியாகியுள்ளது. பாடலாசிரியர் கபிலன் எழுதிய இந்த பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள இந்த படம் வருகிற டிசம்பர் 27ம் தேதி வெளியாகவுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories