சினிமா

“கப் முக்கியம் பிகிலு” - ரசிகர்களை சிலிர்க்க வைத்த ராயப்பனின் Sneak Peek (வீடியோ)

யூடியூப் தளத்தில் வெளியான பிகில் படத்தின் 3வது ஸ்னீக் பீக் காட்சி வைரலாகி வருகிறது.

“கப் முக்கியம் பிகிலு” - ரசிகர்களை சிலிர்க்க வைத்த ராயப்பனின் Sneak Peek (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் 3வது முறையாக உருவாகி கடந்த மாதம் தீபாவளியை முன்னிட்டு வெளியான படம் பிகில். இதில் இரட்டை வேடத்தில் விஜய் நடித்திருந்தார். ஸ்போர்ட்ஸ் ஆக்‌ஷன் படமான பிகில் இன்று வரை திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

நயன்தாரா, கதிர், யோகிபாபு, ஆனந்த் ராஜ், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் என பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை சுமார் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது.

“கப் முக்கியம் பிகிலு” - ரசிகர்களை சிலிர்க்க வைத்த ராயப்பனின் Sneak Peek (வீடியோ)

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் அடித்துள்ளது. இதுவரையில் பிகில் படம் 300 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் படக்குழு தரப்பு தெரிவிக்கிறது.

இதற்கிடையில், பிகில் படத்தின் சில காட்சிகள் MovieBuff தளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே வெளியான இரண்டு வீடியோக்களும் ரசிகர்களை ஈர்த்த நிலையில் தற்போது “கப் முக்கியம் பிகிலு” என்ற விஜயின் ராயப்பன் கேரக்டரின் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

ராயப்பன் வீடியோ வெளியான சில மணிநேரங்களிலேயே லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோவை சமூக வலைதளங்களிலும் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories