சினிமா

3 முட்டைக்கு இவ்வளவு கட்டணமா? - வைரலான பாலிவுட் இசையமைப்பாளரின் ட்வீட்!

அஹமதாபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 3 முட்டைக்கு ஆயிரக்கணக்கில் கட்டண வசூலிக்கப்பட்டதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் இந்தி இசையமைப்பாளர் சேகர் ரவ்ஜியானி.

3 முட்டைக்கு இவ்வளவு கட்டணமா? - வைரலான பாலிவுட் இசையமைப்பாளரின் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஷாருக்கானின் ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட பல்வேறு பாலிவுட் படங்களுக்கு இசையமைத்த சேகர் ரவ்ஜியானியின் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஹமதாபாத்தில் உள்ள 5 நட்சத்திர விடுதியான ஹையாத் ரீஜென்ஸியில் தங்கியிருந்த சேகர் ரவ்ஜியானி, 3 வேகவைத்த முட்டை சாப்பிட்டுள்ளார். அதற்கு அந்த ஓட்டலில் ரூ.1672 கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் ஜி.எஸ்.டிக்கு மட்டும் 250 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சேகர், 3 முட்டைக்கான பில்லை இணைத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “மிகைப்படுத்தப்பட்ட உணவு (முட்டை)” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, கமலின் விஸ்வரூபம் படத்தில் மிரட்டலான வில்லனாக வந்த ராகுல் போஸும் 5 ஸ்டார் ஓட்டலில் கடந்த ஜூலை மாதம் தான் சந்தித்த அனுபவத்தை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

சண்டிகரில் உள்ள மாரியாட் என்ற நட்சத்திர ஓட்டலில் இரண்டு வாழைப்பழம் வாங்கியதற்கு ரூ.442 வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர ஓட்டல்களில் சாதாரண உணவுப்பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது மட்டுமல்லாமல் அதற்கான ஜி.எஸ்.டியும் நூற்றுக்கணக்கில் இருப்பது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories