சினிமா

ஜப்பான் மொழியில் ரீ-ரிலீஸ் ஆகிறது ரஜினியின் ப்ளாக்பஸ்டர் ‘முத்து’ : வைரல் வீடியோ!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வெற்றிப்படமான ‘முத்து’ ஜப்பான் நாட்டில் மீண்டும் ரிலீஸாகியுள்ளது.

ஜப்பான் மொழியில் ரீ-ரிலீஸ் ஆகிறது ரஜினியின் ப்ளாக்பஸ்டர் ‘முத்து’ : வைரல் வீடியோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ரஜினி - மீனா நடிப்பில் 1995ம் ஆண்டு வெளியான படம் ‘முத்து’. ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘முத்து’ படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

நகைச்சுவை கலந்த குடும்பப்படமாக உருவான இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளங்களை கொண்ட ரஜினிகாந்தின் முதல் படமாக ஜப்பான் நாட்டில் வெளியானது ‘முத்து’ தான்.

ஜப்பான் மொழியில் ரீ-ரிலீஸ் ஆகிறது ரஜினியின் ப்ளாக்பஸ்டர் ‘முத்து’ : வைரல் வீடியோ!

சப்டைட்டிலுடன் இந்தப் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் ரஜினியின் தீவிர ரசிகராக மாறினர். அந்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் ‘முத்து’ படம் மகத்தான வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, ரஜினிக்கு ஜப்பானின் டோக்கியோ நகரில் ரசிகர் மன்றமும் வைக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு இருக்கையில், ரஜினியின் எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் ஜப்பான் மக்களுக்கு ‘முத்து’ படத்தின் மீதான ஈர்ப்பு இன்றளவும் குறையவில்லை. அதற்கு சாட்சியாக கடந்த ஆண்டு நவம்பர் 23ம் தேதி முத்து படத்தை அந்நாட்டு மொழியில் டப்பிங் செய்து Dancing Maharaja என்ற தலைப்பில் வெளியிட்டனர்.

இந்நிலையில், 4K தொழில்நுட்பத்தில் டிஜிட்டலாக்கப்பட்ட முத்து படத்தை (Dancing Maharaja) இன்று ஜப்பானில் வெளியிட்டிருப்பதாக ட்விட்டரில் ரஜினி ரசிகர் ஒருவர் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார். இந்தச் செய்தி ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

banner

Related Stories

Related Stories