சினிமா

‘ரஜினி 168’ இசையமைப்பாளர் யார்?: சிவாவின் விருப்பத்தை நிறைவேற்றிய சன் பிக்சர்ஸ்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள ரஜினி 168 படத்தின் இசையமைப்பாளரை அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ்.

‘ரஜினி 168’ இசையமைப்பாளர் யார்?: சிவாவின் விருப்பத்தை நிறைவேற்றிய சன் பிக்சர்ஸ்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ‘தர்பார்’ படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை எட்டிவிட்ட நிலையில், தனது 168வது படத்துக்காக சிறுத்தை சிவாவுடன் இணைந்துள்ளார் ரஜினி.

சன் பிக்சர்ஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்தப் படத்துக்கு தற்காலிகமாக Thalaivar 168 என தலைப்பிடப்பட்டுள்ளது. படத்தின் நடிகர், நடிகைகளுக்கான தேர்வுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், ரஜினி 168ல் காமெடி நடிகர் சூரி இணைந்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. அதேபோல், இந்தப் படத்துக்கும் சிவாவின் சென்டிமென்ட்டான 'V' எழுத்தைக் கொண்டே டைட்டில் அமையவுள்ளதாகவும் பேசப்படுகிறது.

இந்நிலையில், விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்துக்கும் ஏகபோக வரவேற்பு கிடைத்ததால் ரஜினியின் 168வது படத்துக்கும் டி.இமானே இசையமைக்க வேண்டும் என சிவா விருப்பம் தெரிவித்ததால் அதனை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸும் நிறைவேற்றியுள்ளது.

அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அதில், ரஜினி படத்துக்கு முதன்முறையாக டி.இமான் இசையமைக்கவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘பேட்ட’ படத்துக்கு பிறகு ‘ரஜினி 168’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் ஷூட்டிங் டிசம்பர் மாதம் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியானாலும், படக்குழு தரப்பிலிருந்து அது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

banner

Related Stories

Related Stories