சினிமா

“விஜயுடன் இணைய விருப்பம்; ஆனால் வேறு பரிமாணத்தில்” - எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவல்!

விஜய்யை வைத்தும் படம் எடுக்கும் எண்ணம் உள்ளது என அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.

“விஜயுடன் இணைய விருப்பம்; ஆனால் வேறு பரிமாணத்தில்” - எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவுக்கு விஜய் எனும் நடிகரை நாளைய தீர்ப்பு படத்தின் அறிமுகப்படுத்தி வைத்த இயக்குநரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், மீண்டும் விஜயுடன் படத்தில் பணிபுரிய விருப்பமுள்ளதாக கூறியுள்ளார்.

இயக்குநர், நடிகரை அடுத்து தயாரிப்பு களத்தில் இறங்கியுள்ள எஸ்.ஏ.சி, தற்போது ஜெய் நடிப்பில் உருவாகியிருக்கும் கேப்மாரி என்ற படத்தை தயாரித்துள்ளார். இது தொடர்பாக இணையதள சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார் எஸ்.ஏ.சி.

அப்போது பேசிய அவர், தனது மகனான விஜய்யை வைத்து மீண்டும் படம் எடுக்க விருப்பமுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், இயக்குநராக இல்லாமல் தயாரிப்பாளராக விஜயை வைத்து படம் எடுக்கும் எண்ணம் உள்ளது என கூறியுள்ளார். இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் கடந்த 2009ல் வெளியான ஆதி படத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories