சினிமா

“அசாதாரண கனவு கொண்ட சாதாரண மனிதன்” : சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!

சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

“அசாதாரண கனவு கொண்ட சாதாரண மனிதன்” : சூரரைப் போற்று ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இறுதிச்சுற்று படத்துக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூரரைப் போற்று’. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டுள்ளதே இந்த படம்.

இந்தப் படத்தில், மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ், அபர்ணா பாலமுரளி, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகி வரும் படத்தின் ஷூட்டிங் வேலைகள் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

டிசம்பர் மாதம் படம் வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் 2D நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மதுரை மற்றும் வட இந்தியப் பகுதிகளில் சூரரைப் போற்று படமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா, “சூரரைப் போற்று படத்தின் தனது கதாப்பாத்திரத்தின் பெயரை (மாறா) குறிப்பிட்டு, ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண கனவு” என பதிவிட்டுள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கேவும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பானும் வசூல் மற்றும் விமர்சன ரீதியில் அவ்வளவாக திருப்தியை அளிக்காததால் சூரரைப் போற்று படம் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களின் ஆவலை சூர்யாவின் சூரரைப் போற்று படம் பூர்த்தி செய்யுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

banner

Related Stories

Related Stories